வணிகம்

பிரதமர் மோடியிடம் அறிக்கையை சமர்ப்பித்தது 15-வது நிதி ஆணையம்

செய்திப்பிரிவு

15-வது நிதி ஆணையம் பிரதமர் மோடியிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

15-வது நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், 2021- 22 முதல் 2025-26 வரையிலான ஆணையத்தின் அறிக்கையின் நகலை பிரதமர் நரேந்திர மோடியிடம் இன்று வழங்கினர். முன்னதாக கடந்த 4-ஆம் தேதி, குடியரசுத் தலைவரிடம் அறிக்கையை இந்த ஆணையம் வழங்கியது.

ஆணையத்தின் தலைவர் என் கே சிங், செயலாளர் அரவிந்த் மேத்தா ஆகியோருடன் உறுப்பினர்கள் நாராயண் ஜா, பேராசிரியர் அனூப் சிங், டாக்டர் அசோக் லஹிரி மற்றும் டாக்டர் ரமேஷ் சந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

மத்திய நிதி அமைச்சரிடம் இந்த ஆணையம் இன்று அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறது.அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை வாயிலாக விளக்கக் குறிப்புடன் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

SCROLL FOR NEXT