பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டின் 7.73% பங்குகளை கூகிள் இன்டெர்நேஷனல் எல் எல் சி வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

செய்திப்பிரிவு

இந்திய போட்டியியல் ஆணையகம் (சிசிஐ), ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டின் 7.73 சதவீத பங்குகளை கூகிள் இன்டெர்நேஷனல் எல் எல் சி வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கூகிள் இன்டெர்நேஷனல் எல் எல் சி, ஆல்பாபெட் இன்கின் துணை நிறுவனமான கூகிள் எல் எல் சி-யின் துணை நிறுவனமாகும். ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை
நிறுவனமாகும்.

போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி மேற்கண்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

SCROLL FOR NEXT