வணிகம்

நெல் கொள்முதல் 262.32 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்வு

செய்திப்பிரிவு

காரீப் பருவத்தில், நெல் கொள்முதல் 262.32 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

இந்தாண்டு காரீப் பருவத்தில் தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் நெல் கொள்முதல் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 10ம் தேதி வரை 262.32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே கால கொள்முதலை விட 20.80% அதிகம்.

இதுதவிர தமிழக உட்பட பல மாநிலங்களில் இருந்து 45.10 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ம் தேதி வரை, அரசு முகமைகள் மூலம் 50055.63 மெட்ரிக் டன் பாசிப் பயறு, உளுந்து, கடலை, சோயாபீன்ஸ் ஆகியவை தமிழகம் உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த 29,168 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.268.65 கோடி வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT