இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனமான இஃப்கோ, NP 20:20:0:13 அமோனியம் பாஸ்பேட் சல்பேட் உரங்களின் விலையை நாடெங்கிலும் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் குறைத்துள்ளது. இந்த விலைக்குறைப்பு உடனே அமலுக்கு வருகிறது.
மண்ணின் முக்கிய ஊட்டச் சத்தான சல்பருக்கு, விவசாயிகள் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதாக இஃப்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊட்டச்சத்தின் மூலம் பயிர்களின் தரம் உயர்ந்து தாவரங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.