தமிழகம், பஞ்சாப் உட்பட 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், காரீப் பருவ நெல் கொள்முதல் சுமுகமாக நடக்கிறது. நெல் கொள்முதலுக்காக , தமிழக விவசாயிகள் உள்ளிட்ட 21.90 லட்சம் விவசாயிகள், குறைந்த பட்ச ஆதரவு விலையாக ரூ.48,766.12 கோடி பெற்றுள்ளனர்.
கடந்த 9ம் தேதி வரை 258.30 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை அரசு கொள்முதல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 20.22% அதிகம். இதற்காக 21.90 லட்சம் விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.48,766.12 கோடியை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.
மேலும், மாநிலங்களின் வேண்டுகோள்படி 45.10 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளாவிலிருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதி வரை, 45282.30 மெட்ரிக் டன் பாசி பயிறு, உளுந்து, நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகியவற்றை ரூ.242.63 கோடி மதிப்பில் அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 26,352 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.