பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

ரூ.1000 கோடிக்கும் அதிகமாக கணக்கில் காட்டப்படாத வருமானம்: சென்னை, மதுரையில் 5 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

செய்திப்பிரிவு

சென்னை மற்றும் மதுரையில் உள்ள ஐந்து இடங்களில் 2020 நவம்பர் 4 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இதுகுறித்து வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாவது:

தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு துறையில் இயங்கும் சென்னையை சேர்ந்த குழுமம் ஒன்றுக்குத் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனைகள் நடந்தன.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்றன.

இந்த சோதனையின்போது ரூபாய் 1000 கோடிக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத வருமானத்தைப் பற்றிய ஆதாரங்கள் கிடைத்தன. மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT