வணிகம்

கரூர் வைஸ்யா வங்கி லாபம் ரூ.142 கோடி

பிடிஐ

தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.142.22 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வங்கியின் நிகர லாபம் 57.14 சதவீதம் அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.90.50 கோடியாக இருந்தது. கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,570.27 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் ரூ.1,494.86 கோடியாக இருந்தது.

இந்த காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் 1.36 சதவீதத்திலிருந்து 1.96 சதவீதமாக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT