பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

சுகாதாரம், மருந்து துறைகளில் ஒத்துழைப்பு; இந்தியா - இஸ்ரேல் புரிந்துணர்வு ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரம் மற்றும் மருந்து ஆகியத் துறைகளில் இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்ததிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கீழ்கண்டத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணிபுரியலாம்:

* மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்களின் பரிமாற்றம் மற்றும் பயிற்சி

* மனித வள மேம்பாடு மற்றும் சுகாதார வசதிகளை அமைப்பதில் உதவி

* மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் ஒழுங்குமுறை குறித்த தகவல் பரிமாற்றம்

* பருவநிலை மாற்றம் தொடர்பான மக்களின் ஆரோக்கியம் குறித்த மதிப்பீடு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள்

* பருவநிலை மாற்றத்தை தாங்குவதற்கான உள்கட்டமைப்பு குறித்த நிபுணத்துவத்தை பகிர்தல் உள்ளிட்டவை

* பல்வேறு தொடர்புடைய துறைகளில் பரஸ்பர ஆராய்ச்சியை ஊக்குவித்தல்

* வேறு எந்தத் துறையிலாவது ஒத்துழைப்புத் தேவைப்பட்டால் அது குறித்து இரு தரப்பும் முடிவெடுக்கலாம்

SCROLL FOR NEXT