வணிகம்

ஐடிஎப்சி வங்கி தொடக்கம்

செய்திப்பிரிவு

நாட்டின் 91-வது பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கியாக ஐடிஎப்சி வங்கி வியாழன் அன்று தொடங்கப்பட்டது. 23 கிளைகளுடன் இந்த வங்கி தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் 15 கிளைகள் மத்திய பிரதேசத்தில் உள்ளன.

தனிநபர் வங்கி சேவைகள் குறித்து கடந்த வாரம் ஐடிஎப்சி அறிவித்தது. அடுத்த வருடம் ஜனவரி முதல் முறையாக சேவை கள் தொடங்கும் என்று தெரி வித்திருந்தது. மும்பையை தலை மையாக கொண்டு இந்த வங்கி செயல்படும். இப்போது 1200 பணி யாளர்கள் பணிபுரிகிறார்கள்.

இந்தூர், ஹர்தா என மத்திய பிரதேசத்தில் அதிக கிளைகளும் கார்பரேட் மற்றும் ஹோல்சேங்க் பேங்கிங் பிரிவுக்காக புணே, சென்னை, கொல்கத்தா, பெங்க ளூர், ஹைதராபாத், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களிலும் வங்கி கிளைகள் தொடங்கபட்டுள்ளன என்று நிர்வாக இயக்குநர் ராஜீவ் லால் கூறினார்.

சேமிப்பு கணக்குக்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. (ஒரு கோடி ரூபாய் வரை உள்ள தொகைக்கு). ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்யப் படும் தொகைக்கு 6 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 9.50 சதவீதமாகும். ஒரு வருட டெபாசிட்டுக்கு 8 சதவீத வட்டி நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. மூத்த குடிமக் களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படும்.

தனிநபர் கணக்குகளுக்கு டெபிட் கார்ட் வழங்கப்படும். இப் போதைக்கு ஐடிஎப்சி வங்கிக்கு என ஏடிஎம்கள் தொடங்குவ தில்லை என்று முடிவு செய்யப் பட்டிருக்கிறது. அதனால் பிற வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியும். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

11 வருடங்களுக்கு பிறகு பந்தன் மற்றும் ஐடிஎப்சி ஆகி யவை வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் பந்தன் வங்கி தனது சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT