வணிகம்

செப்டம்பர் மாத உற்பத்தி வளர்ச்சி குறைவு

பிடிஐ

இந்திய தொழில்துறையின் உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாக குறைந்துள்ளது. செப்டம்பர் மாத தொழில் வளர்ச்சி புள்ளிவிவரங்கள் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. தேவை குறைவு காரணமாக உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதாக தொழில் ஆய்வுகள் தெரி விக்கிறது.

நிக்கெய் உற்பத்தி கொள் முதல் நிர்வாகத்தின் புள்ளிவிவரங் களில் இது தெரியவந்துள்ளது. செப்டம்பர் மாதம் உற்பத்தி வளர்ச்சி 51.2 சதவீதமாக சரிந்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதமான ஆகஸ்ட்டில் 52.3 சதவீதமாக இருந்தது. முன்னதாக இந்த சரிவு 52 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆய்வு 50 புள்ளி விவரங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறை புதிய வேலைகளை உருவாக்கத்துக்கும், இந்திய உற்பத்தி வளர்ச்சிக்கும் சீராக உதவி செய்யும் என்கிற நிலையில் கடினமான பொருளாதார சூழல் காரணமாக செப்டம்பர் மாதம் உற்பத்தி வளர்ச்சி சரிந்துள்ளது என்று சந்தை பொருளாதார வல்லுனர் பாலியன்னா டெ லிமா கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் பொரு ளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. முக்கியமாக சீனாவின் பொரு ளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. மார்ச் 2014க்கு பிறகு புதிய ஆர்டர்களின் சப் இண்டெக்ஸ் கடந்த 3 மாதங்களில் குறைந் துள்ளது. சப் இண்டெக்ஸ் 54.5 சதவீதத்திலிருந்து செப்டம்பர் மாதம் 52 சதவீதமாக குறைந் துள்ளது.

இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் ரெபோ வட்டி விகித குறைப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி விலை சரிவு மற்றும் உற்பத்தியாளர்கள் வாடிக்கை யாளர்களுக்கு குறைந்த விலை யில் கொடுத்தது போன்ற காரணங் களால் சப் இண்டெக்ஸின் உள்ளீடு விலைகள் பிப்ரவரி 2009க்கு பிறகு குறைந்துள்ளது.

உள்ளீடு விலைகள் தொடர்ந்து இரண்டாவது மாதமாக செப்டம்பர் மாதம் குறைந்துள்ளது. இந்த சூழல் பொருளாதார மந்த நிலைக்கான தோற்றத்தை உருவாக்கவில்லை. நிறுவனங்கள் விலை பேரங்கள், விற்பனை விலை சராசரிக்கும் குறைவு, மற்றும் உற்பத்திைய மேம்படுத்துவது, போட்டிச் சூழல் போன்றவற்றை நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும் என்று டெலிமா குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT