கோப்புப்படம் 
வணிகம்

8 மாதங்களில் முதல் முறையாக ஜிஎஸ்டி வரி வருவாய் அக்டோபரில் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்தது

பிடிஐ


கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக ஜிஎஸ்டி வரி வருவாய் அக்டோபர் மாதத்தில் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 31-ம் தேதிவரை ஜிஎஸ்டி ரிட்டனை 80 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.95 ஆயிரத்து 379 கோடி ஜிஎஸ்டி வரிவருவாய் வசூலான நிலையில் இந்த ஆண்டு அதைவிட 10 சதவீதம் கூடுதலாக வசூலாகியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரியாக ரூ.19 ஆயிரத்து 193 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரியாக ரூ.5,411 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியாக ரூ52ஆயிரத்து 540 கோடியும் வசூலாகியுள்ளது. இதில் செஸ் ரூ.8ஆயிரத்து 11 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் லாக்டவுன் கொண்டுவரப்பட்டதிலிருந்து பொருளாதார முடக்கம் காரணமாக ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.ஒரு லட்சம் கோடி வசூலாவது குறைந்திருந்து. இப்போது மீண்டும் ஜிஎஸ்டிவரி வருவாய் ரூ.ஒருலட்சம் கோடிைய தொட்டுள்ளது பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவதை காட்டுகிறது.

SCROLL FOR NEXT