ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் 1 லட்சம் கார்களை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இந்தியாவில் தயாரிக் கப்பட்ட 20,000 டீசல் கார்களும் அடங்கும்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களது கார்களின் புகை அளவு வெளியேற்ற கருவியில் மோசடி செய்தது தொடர்பாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த கார்களை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. நவம்பர் மாதம் 8 தேதிக்குள் இந்த நடவடிக்கை இருக்கும் எனவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்பட்ட இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கள் உள்பட, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் டீசல் கார்களும் இந்த வகையில் திரும்ப பெற உள்ளது.
வென்டோ, ஜெட்டா, பஸாட் செடான், போலோ ஹேட்ச்பேக் கார் மற்றும் போலோ கிராஸ் கார்களில் புகை அளவு மோசடி கருவி பொறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச அளவில் புகார் எழுந்தது. கார்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடர்பாக பேசிய ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இது தொடர்பாக தற்போது ஆய்வு செய்து வருகிறோம். மேலும் கார்களை திரும்ப பெறுவது தொடர்பாக எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவின் முக்கிய கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் உலக அளவில் 1 கோடிக்கும் அதிகமான கார் களில் புகை அளவு மோசடி கருவியை பொருத்தியிருக்கலாம் என புகார் எழுந்தது. நிறுவ னத்தின் 78 ஆண்டு கால வரலாற்றில் இது மிகப்பெரிய சறுக்கலாகும். உலக அளவில் கார் உற்பத்தி சந்தையை இது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக நிறுவனம் முதல் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இந்த புகை மோசடி கருவி தொடர்பாக இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறை ஆராய்ச்சி அமைப்பான ஏஆர்ஏஐ, இந்தி யாவில் விற்பனை செய்யப் பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் கார்களை ஆய்வு செய்து வருகிறது. தற்போது வரை ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்கள் குறித்த விற்பனை விவரங்களை திரட்டி வருகிறது. இந்த அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் அரசிடம் சமர்ப் பிக்க உள்ளதாக தெரிவித் துள்ளது. ஏஆர்ஏஐ தலைவர் ராஷ்மி உர்த்வர்சே அரசு துறை அதிகாரிகளிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக கூறி யுள்ளார்.
சர்வதேச அளவில் இந்த மோசடி புகார் எழுந்ததும், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் கார்களில் ஆய்வு செய்ய, மத்திய அரசு செப்டம்பர் மாதம் இந்த அமைப்புக்கு கடிதம் எழுதியது. முக்கியமாக ஜெட்டா, பஸாட் செடான் வகை கார்களில் இந்த மோசடி கருவிகள் பொருத்த பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.