தொழில்துறை ஊழியர்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட நுகர்வோர் குறியீட்டு எண், ஊழியர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை ஊழியர்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட நுகர்வோர் குறியீட்டு எண்ணை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் இன்று வெளியிட்டார்.
தொழில் துறையினருக்கான நுகர்வோர் குறியீட்டு எண்ணின் புதிய பதிப்பு, 2001=100 என்ற அடிப்படையில் இருந்து 2016=100 என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஊழியர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தத் திருத்தி அமைக்கப்பட்ட குறியீட்டு எண் அமைந்து இருப்பதாகத் தெரிவித்தார். இந்தக் கணக்கிடுதலில் முக்கிய பங்கு வகித்த தொழில் துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான தொழில் பிரிவு அதிகாரிகளுக்கு அமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.