530.10 மெட்ரிக் டன் மாலத்தியான் டெக்கனிக்கல் பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்து எச்ஐஎல் சாதனை படைத்துள்ளது.
மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் வேதியியல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய பூச்சிக்கொல்லிகள் லிமிடெட் நிறுவனம், முன் எப்போதும் இல்லாத வகையில் 2020-21-ம் நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டில் மாலத்தியான் டெக்னிக்கல் பூச்சிக்கொல்லி மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து சாதனை மேற்கொண்டுள்ளது.
கரோனோ பெருந்தொற்று கட்டுப்பாடுகளுக்கு இடையேயும், நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டில் இந்த நிறுவனம் 530.10 மெட்ரிக் டன் அளவுக்கு மாலத்தியான் டெக்கனிக்கல் எனும் பூச்சி மருந்தை உற்பத்தி செய்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் 375.5 மெட்ரிக் டன் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இப்போதைய உற்பத்தி வளர்ச்சி என்பது 41 % ஆக அதிகரித்திருக்கிறது.
முதல் இரண்டு காலாண்டுகளில் மாலத்தியான் விற்பனையும் அதிக அளவுவுக்கு நடந்துள்ளது. மத்திய வேளாண் துறை அமைச்சகத்தின் வெட்டுக்கிளிகள் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் தொற்று கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் இருந்து அரசாங்கத்துக்கான தொடர்பு என்ற அடிப்படையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் இதே காலகட்டத்தில் ஈரானுக்கு மாலத்தியான் டெக்கனிக்கல் மருந்தை இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
புத்திசாலித்தனமான இந்த சாதனையைப் புரிந்த இந்திய பூச்சிக்கொல்லிகள் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடா பாராட்டுத்தெரிவித்தார் .