வணிகம்

10 ரூபாய் நாணயம் ரிசர்வ் வங்கி வெளியீடு

செய்திப்பிரிவு

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய நிகழ்வின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் புதிய 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளது.

இந்த 10 ரூபாய் நாணயத்தின் முன்புறத்தில் அசோக தூணின் சிங்க முகமும் அதன் பின்புறம் மகாத்மா காந்தியின் இரட்டை உருவப்படமும் உள்ளது. இந்த இரட்டை உருவப்படத்தின் மேற்புறம் “RETURN FROM AFRICA” என்று பொறிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாணயத்தின் மத்தியில் முறையே இடப்பக்கம் மற்றும் வலப்பக்கத்தில் 1915 மற்றும் 2015 என்ற எண்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

SCROLL FOR NEXT