வணிகம்

ஜென்சார் டெக்னாலஜியில் அபெக்ஸ் பார்ட்னர்ஸ் முதலீடு: 23 சதவீத பங்குகளை வாங்கியது

செய்திப்பிரிவு

பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான அபெக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் ஐடி துறை நிறுவனமான ஜென்சார் டெக்னாலஜி நிறுவனத்தில் முதலீடு செய்து, 23 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறது. ஆர்பி கோயங்கா குழுமத்தை சேர்ந்தது ஜென்சார் டெக்னாலஜீஸ்.

ஜென்சார் நிறுவனத்தில் எலெக்ட்ரா பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ஏற்கெனவே முதலீடு செய்திருந்தது. அந்த பங்குகளை இப்போது அபெக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. 23 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் எலெக்ட்ரா நிறுவனத்துக்கு 860 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

எலெக்ட்ரா நிறுவனம் முதலீடு கடந்த 18 வருடங் களுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது. முதலீடு செய்த தொகையை விட 19 மடங்கு லாபம் (டிவிடெண்ட் உள்ளிட்டவற்றையும் சேர்த்து) கிடைத்திருக்கிறது. கடந்த 1997-ம் ஆண்டு 90 லட்சம் டாலர் எலெக்ட்ரா முதலீடு செய்தது.

இந்த இணைப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜென் சார் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கணேஷ் நடராஜன் தெரிவித்தார். அபெக்ஸ் நிறுவனம் முதலீடு செய் திருப்பது நம்பிக்கையின் வெளிப் பாடாக பார்க்கிறேன் என்றார்.

ஜென்சார் டெக்னாலஜி புணேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 8,000 நபர்கள் 29 கிளைகளில் பணிபுரி கிறார்கள். இந்த நிறுவனத்தில் ஆர்பிஜி குழுமம் நிறுவனராக தொடர்ந்து இருக்கிறது. அந்த குழுமத்திடம் 48 சதவீத பங்குகள் உள்ளன. அபெக்ஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதால் அந்த நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் குழுவில் இடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 76 கோடி ரூபாயாக இருந்தது. வருமானம் 704 கோடி ரூபாய் ஆகும்.

இங்கிலாந்தை சேர்ந்த அபெக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் ஏற்கெனவே ஐகேட் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது. ஐகேட் நிறுவனத்தை கேப்ஜெமினி நிறுவனம் வாங்கி இருந்ததால் கடந்த ஏப்ரலில் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறியது. இப்போது இந்திய ஐடி துறையில் மீண்டும் அபெக்ஸ் பார்ட்னர்ஸ் முதலீடு செய்திருக்கிறது.

SCROLL FOR NEXT