கூட்டுறவு நிறுவனங்களால் சுகாதார கட்டமைப்பை உருவாக்க, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் ரூ.10,000 கோடி மதிப்பிலான ஆயுஷ்மான் சகாகர் நிதி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் சாகர் என்ற திட்டத்தை மத்திய வோளாண்துறை இணையமைச்சர் பர்சோதம் ருபெல்லா இன்று தொடங்கி வைத்தார். இது, நாட்டில் சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதில், கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற உதவும் தனிச்சிறப்பான திட்டம். இத்திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் (என்சிடிசி) உருவாக்குகிறது.
இத்திட்டத்துக்காக வரும் ஆண்டுகளில் என்சிடிசி, கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி வரை கடன் அளிக்கும் என ருபெல்லா அறிவித்தார்.
விவசாயிகளின் நலனை வலுப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையாக என்சிடிசி திட்டம் இருக்கும். கிராம பகுதிகளிலும் சுகாதார சேவைகள் கிடைப்பதில், ஆயுஷ்மான் சாகர் திட்டம் புரட்சியை ஏற்படுத்தும் என ருபெல்லா கூறினார். தற்போதுள்ள கூட்டுறவு அமைப்புகள், விவசாயிகளுக்காக சுகாதார சேவைகளை வழங்க முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
என்சிடிசி நிர்வாக இயக்குனர் சந்தீப் நாயக் பேசுகையில், ‘‘நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களால் 52 மருத்துவமனைகள் இயக்கப்படுவதாகவும், அவற்றில் 5,000-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். கூட்டுறவு நிறுவனங்களின் சுகாதார சேவைகளுக்கு, என்சிடிசி நிதி, ஊக்கம் அளிக்கும் எனவும் அவர் கூறினார்.
ஆயுஷ்மான் சாகர் திட்டம், மருத்துவமனைகள் அமைப்பதற்கும், ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்கும், விரிவாக்கத்துக்கும், பழுதுபார்க்கவும், புதுப்பிக்கவும், மருத்துவ கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கும் நிதியளிக்கும்.