சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை வழங்குமாறு 2,800-க்கும் அதிகமான பெரு நிறுவனங்களுக்கு மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தனது முயற்சிகளின் சிறப்பான வெற்றியை தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை வழங்குமாறு இன்னும் அதிக அளவிலான நிறுவனங்களை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி 500 நிறுவனங்களுக்கு இதுதொடர்பாக அமைச்சகம் கடந்த மாதம் வைத்த கோரிக்கையை தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை வழங்குமாறு 2,800-க்கும் அதிகமான பெரு நிறுவனங்களுக்கு மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தற்போது கடிதம் எழுதி உள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை செலுத்தி விடுமாறு மத்திய அமைச்சகங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளையும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் ரூபாய் 3,700 கோடியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலுத்தின. இதுவரை செலுத்தியதிலேயே இதுதான் அதிக தொகை ஆகும்.
கடந்த ஐந்து மாதங்களில் ரூபாய் 13,400 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் விழாக்காலத்தில் தொழில் வாய்ப்புகளை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் அமைச்சகம் செய்து வருகிறது.