வணிகம்

திடக்கழிவு சுத்திகரிப்பு தொழில்நுட்ப வசதி; சிஎஸ்ஐஆர் உருவாக்கம்

செய்திப்பிரிவு

நிலையான திடக்கழிவு சுத்திகரிப்பு தொழில்நுட்ப வசதியை சிஎஸ்ஐஆர்- சிஎம்இஆர்ஐ உருவாக்கியுள்ளன.

சுற்றுச் சூழல் மாற்றங்களால் நிலையான திடக்கழிவுகள் சுத்திகரிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் கழிவு பொருட்கள் உபயோகமான பொருட்களாக மாற்றவும் சுற்றுப்புறத்தை பாதிக்காத சூழலையும் உருவாக்க முடியும்.

இதுகுறித்து கிருஷி ஜக்ரன் என்னும் நிகழ்ச்சியில், சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ, துர்காபூர், இயக்குனர், பேராசிரியர் (டாக்டர்) ஹரிஷ் ஹிராணி, சனிக்கிழமையன்று கலந்து கொண்டு பேசியபோது, பாரம்பரிய கழிவு சுத்திகரிப்பு தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும் தற்போதைய சூழலில் திடக் கழிவுகளை முறையாக கையாள்வது எவ்வாறு அவசியமாக்கப் பட்டிருக்கிறது என்பதையும் அவர் விளக்கினார்.

முறையாக சுத்திகரிக்கப்படாத கழிவுகளால், நிலப்பரப்பு மாசடைந்து, பல்வேறு நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணியாக அமைகிறது என்று அப்போது அவர் குறிப்பிட்டார். சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உருவாக்கியுள்ள திடக்கழிவு சுத்திகரிப்பு தொழில்நுட்பத் திறன் மூலம் திடக்கழிவுகள் பரவலாக அழிக்கப்படுவதுடன், காய்ந்த இலைகள் உள்ளிட்ட கழிவுகளிலிருந்து உபயோகமான பொருட்களும் உருவாக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேம்படுத்தப்பட்ட தரம் பிரிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த வசதிமுறை குறைந்தபட்ச மாசு ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முகக் கவசம், சானிட்டரி நாப்கின், டயாப்பர் முதலிய கழிவுகளை முறையாகக் கையாளும் வகையில் இந்த திடக்கழிவு சுத்திகரிப்பு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக டாக்டர் ஹரிஷ் ஹிராணி மேலும் கூறினார். கொவிட்-19 பரவலுக்கு எதிராக கிருமி நாசினியுடன் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ தயாரித்துள்ள இந்த தொழில்நுட்பம், கழிவுகளற்ற நிலப்பரப்பையும், நகரத்தையும் உருவாக்குவதுடன், வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT