வணிகம்

தமிழக, கர்நாடகா விவசாயிகளிடம் இருந்து  5089 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல்

செய்திப்பிரிவு

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

2020-21 கரிப் பருவத்திற்குத் தேவையான சந்தைப்படுத்துதல் தொடங்கப்பட்டதையடுத்து கடந்த காலங்களைப் போலவே இந்த வருடமும் அதே குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடமிருந்து அரசு தானியங்களை கொள்முதல் செய்கிறது.

உத்தரகண்ட் உள்ளிட்ட புதிய மாநிலங்களில் நெல்லின் கொள்முதல் தொடங்கப் பட்டதையடுத்து, 2020-21 கரீப் பருவத்திற்கான நெல் கொள்முதல் அக்டோபர் 16-ம் தேதி வரை 14495.22 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 76.77 லட்சம் மெட்ரிக் டன், 6.69 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 16-ம் தேதி வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் 5.21 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 723.79 மெட்ரிக் டன் அவரை விதையும், உளுந்தும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 681 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பருத்தி விதைகளுக்கான கொள்முதல், அக்டோபர் 16-ம் தேதி வரை 42555.85 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 150654 பேல்களை, இந்திய பருத்தி நிறுவனம், 30139 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

SCROLL FOR NEXT