பேஸ்புக் பங்குகளால் உலகின் கோடீஸ்வர பாப் பாடகராக உயர்ந்துள்ளார் அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் பால் டேவிட் ஹியூஸன். இவர் போனோ என்ற இசைக் குழுவை உருவாக்கி அதன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
55 வயதாகும் இவர் பாப் பாடகர் மட்டுமல்ல, துணிகர முதலீட்டாளர், தொழிலதிபர் மற்றும் சிறந்த நன்கொடையாளர் என்ற பன்முகங்களைக் கொண் டவர். டப்ளினைச் சேர்ந்த ராக் இசைக் குழுவை இவர் உருவாக்கியுள்ளார். யு2 என்ற இந்த இசைக் குழு 1976-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பேண்ட் எய்ட், பேண்ட் எய்ட் 30, பேசஞ்சர்ஸ் என்ற பெயர்களில் இசைக் குழுவை உருவாக்கியுள்ளார்.
2009-ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தில் 2.3 சதவீத பங்குகளை எலிவேஷன் பார்ட் னர்ஸ் மூலம் இவர் 5.6 கோடி டாலருக்கு வாங்கியுள்ளார். அதன் மதிப்பு தற்போது 94 கோடி டாலராக உயர்ந்துள்ளது. எலிவேஷன் பார்ட்னர்ஸ் எனும் முதலீட்டு நிறுவனத்தில் இவரும் ஒரு பங்குதாரர் ஆவார்.
இதன் மூலம் கோடீஸ்வர பாடகராக அறியப்பட்ட பீட்டில் இசைக்குழுவைச் சேர்ந்த பால் மெக்கார்ட்னியை விட அதிக சொத்துகளைக் கொண்ட பாப் பாடகராக இவர் உயர்ந்துள்ளார். இவர் 1976-ல் உருவாக்கிய டப்ளின் ராக் குழுதான் உலகின் மிகப் பெரிய ராக் இசைக் குழுவாக வளர்ந்துள்ளது.
கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தங்கள் நிறுவன முக நூலை ஒரு நாளில் 100 கோடிக்கும் அதிகமான வர்கள் பயன்படுத்துவதாகத் தெரி வித்தார். அதாவது உலகில் 7 பேரில் ஒருவர் பேஸ்புக் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
பாப் இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் வெளியீடு மூலம் இதுவரை சம்பாதித்த தொகையை விட 6 ஆண்டுகளில் பேஸ்புக் முதலீட்டில் கிடைத்துள்ள வருமானம் மிகவும் அதிகம் என தெரிவித்துள்ளார்.