வணிகம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கும் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் தொடர்பில்லை: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்கும் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத் துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சான் ஜோஸ் நகரில் உள்ள பேஸ்புக் நிறுவன தலைமையகத்துக்குச் சென்றார். நேற்று முன்தினம் 45 நிமிஷம் அங்கிருந்த அவர் பலரது கேள்விகளுக்குப் பதில் அளித்தார். பின்னர் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் மற்றும் அவரது மனைவிக்கு நினைவுப் பரிசையும் மோடி அளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு முன்பாகவே பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்கின் பேஸ்புக் புரொபைல் படமாக இந்தியாவின் தேசியக் கொடியின் மூவர்ண பின்னணியில் நரேந்திர மோடியின் புகைப்படமும், அவருடைய படத்தையும் வைத்திருந்தார். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ஒத்து ழைப்பு அளிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது.

அத்துடன் பேஸ்புக் பயனா ளிகள் அனைவரும் இதுபோல் தங்களது புகைப்படத்தை புரொபைல் படமாக வைப்ப தற்கு ஏதுவாக ஒரு டூல் அளித் திருந்தது. அந்த டூல் சர்ச்சைக் குரிய பேஸ்புக்.ஓஆர்ஜி திட்டத் துக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை யடுத்து இந்த விவகாரம் பெரிதாக விஸ்வரூபமெடுத்து. இந்நிலையில் இது தனது நிறுவனத்தின் ஒரு பொறியாளர் செய்த தவறால் ஏற்பட்டது என்று பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பேஸ்புக் பயனாளிகள் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ஆதரவாக தங்களது புரொபைல் படம் வைப்பதற்கும், பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

தங்கள் நிறுவன பொறியாளர் தவறுதலாக இன்டர்நெட்.ஓஆர்ஜி புரொபைல் படம் என எழுதிவிட்டதாக அது விளக்கம் அளித்துள்ளது. அதற்குரிய சங்கேத வார்த்தையை அவர் தவறுதலாக குறிப்பிட்டுவிட்ட தாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

புரொபைல் படம் மாற்று வதற்கும் இன்டெர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் உரிய சங்கேத வார்த்தையை உடனடியாக மாற்றிவிட்டதாகவும் பேஸ்புக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் நுகர்வோருக்கு அடிப்படையில் இணையதள வசதி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்தை 8 லட்சத் துக்கும் அதிகமானோர் பயன் படுத்துகின்றனர். ஆனால் இணையதள பயன்பாட்டாளர்கள் இன்டர்நெட்.ஓஆர்ஜி செயல் பாட்டை விமர்சனம் செய்துள்ளனர். இணைய சமநிலை என்ற நிலைப் பாட்டுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இணையதளத்தால் இணைக் கப்பட வேண்டிய பலர் உள்ள நாடுகளில் இணையதள சமநிலை குறித்து குறித்து விவாதிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று மார்க் ஜுகர்பெர்க் தெரிவித் திருந்தார். அத்துடன் நுகர்வோர் இணையதள சமநிலை சூழலை எட்டுவதற்குத் தேவையான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் இணையதள இணைப்பைப் பெறுவதற்கான புதிய உத்திகளை வகுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

இணையதள ஆர்வலர்கள் இன்டர்நெட்.ஓஆர்ஜி சேவையை கடுமையாக விமர்சித்துள்ளனர். இது சமீபத்தில் இலவச சேவை என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இணையதள நடுநிலை என்ற கொள்கைக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளனர். இணையதள பயன்பாட்டில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு விரைவான சேவையை குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து அளிப்பது என்பது இணையதள சமன்பாட்டுக்கு எதிரானது என்றும் இதுபோன்ற சேவையைத்தான் சிலதொலைத் தொடர்பு நிறுவனங்கள் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT