வணிகம்

வோடபோன் நிறுவனத்தின் நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு விவகாரம்: நிதி அமைச்சகம் விளக்கம் 

செய்திப்பிரிவு

வோடபோன் நிறுவனத்தின் நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு குறித்து நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

வோடபோன் நிறுவனத்தின் வழக்கில் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று அரசின் அட்டர்னி ஜெனரல் அரசிடம் கருத்துத் தெரிவித்திருப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகிறது.

இதுஉண்மையல்ல. அந்த செய்திக்கு அடிப்படை ஆதாரமும் இல்லை. தீர்ப்பின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அமைச்சகத்துக்குள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிகைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.

SCROLL FOR NEXT