வணிகம்

கேரளத்தில் என்ஆர்ஐ சேமிப்பு ரூ.1 லட்சம் கோடி

ஐஏஎன்எஸ்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) கேரள வங்கிகளில் போட்டுள்ள சேமிப்புத் தொகை ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் என தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியது.

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு வெளியிட்ட அறிக்கையின்படி மொத்த சேமிப்புத் தொகை ரூ. 1,17,349 கோடி. இது கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி இருந்த நிலவரத்தைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகமாகும். ஜூன் 30, 2014-ல் இருந்த சேமிப்பு ரூ. 94,097 கோடியாகும்.

கடந்த சில ஆண்டுகளாக வெளி நாடு வாழ் இந்தியர்கள் கேரள வங்கிகளில் சேமிக்கும் தொகை அதிகரித்து வருகிறது. 2013-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி ரூ.75,883 கோடியாக இது இருந்தது.

வெளி நாடுகளில் பணிபுரியும் கேரள மாநிலத்தவர்களின் எண்ணிக்கை 23.63 லட்சமாகும்.

SCROLL FOR NEXT