9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தயாராக இருப்பதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தினாலும் அல்லது இதர சர்வதேச நிகழ்வுகள் நடந்தாலும் அதன் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க ரிசர்வ் வங்கி தயராக உள்ளது. இது போன்ற நிகழ்வுகளை இந்தியா எளிதாக எதிர்கொள்ளும், இந்திய பொருளாதாரத்துக்கு பல கட்ட பாதுகாப்பு இருக்கிறது. இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம், அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் நமக்கு சாதக மாக உள்ளன என்றார். கடந்த 2009-ம் ஆண்டு முதலே அமெரிக் காவின் வட்டி விகிதம் கிட்டத் தட்ட பூஜ்ஜியம் என்ற நிலை யிலே உள்ளது. இப்போது வேலை வாய்ப்பு தகவல்கள் சாதகமாக வந்திருப்பதால் வட்டி உயர்த்தப் படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
15% பங்குச்சந்தையில்…
ஓய்வூதிய நிதியில் 15 சதவீதம் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 5 சதவீத அளவுக்கு மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. வருங்காலத்தில் இபிஎப்ஓ 15 சதவீத தொகையினை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் என்று நம்புவதாக ஜெய்ந்த் சின்ஹா தெரிவித்தார். பென்ஷன் தொகை இந்திய பங்குச்சந்தையில் வரும் போது இந்திய பங்குச்சந்தையின் ஏற்ற இறக்க நிலை குறையும்.
பா.ஜ.க தலைமையிலான அரசு நீண்ட காலத்துக்கு 8 முதல் 10 வருடங்களுக்கு நிலையான வளர்ச்சிக்குத் திட்டமிட்டு வருகிறது. பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து பணவீக்கம், நடப்பு கணக்கு பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை ஆகியவை மேம்பட்டிருக்கிறது என்றார்.
அமெரிக்காவின் வட்டி விகிதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற நிலையிலே உள்ளது. இப்போது வேலை வாய்ப்பு தகவல்கள் சாதகமாக வந்திருப்பதால் வட்டி உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.