மாசு வெளியேற்றும் நெறிமுறைகள் டிராக்டர்களுக்கு அடுத்த அக்டோபர் முதலும், கட்டுமான உபகரண வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 2021 முதலும் அமலாகிறது.
மோட்டார் வாகன சட்டம் 1989ல் ஜி எஸ் ஆர் 598 (இ) வரைவு திருத்தம் மேற்கொள்வது குறித்து செப்டம்பர் 30, 2020 தேதி, டிராக்டர்களுக்கு டிஆர்எம்-IV மாசு வெளியேற்றும் விதிமுறைகள் இந்த வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை ஓராண்டு நீட்டித்து அடுத்த வருடம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கருத்துக்களை வேளாண்துறை, டிராக்டர் தயாரிப்பாளர்கள் மற்றும் வேளாண் அமைப்புகளிடமிருந்து அமைச்சகம் பெற்றுள்ளது.
கட்டுமான உபகரண வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 2021 முதல் மாசு வெளியேற்றும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.