வணிகம்

ரயில்வே சரக்குப் போக்குவரத்தில் 50% நிலக்கரி வணிகம்

செய்திப்பிரிவு

ரயில்வே சரக்குப் போக்குவரத்தில் சராசரியாக 50% நிலக்கரி சரக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி மற்றும் மின்சாரத்துறைகளின் முன்னணி தலைவர்களுடன் மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக & தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை மேற்கொண்டார்.

நிலக்கரி போக்குவரத்து தொடர்பாக நிலக்கரி மற்றும் மின்சாரம், ரயில்வே துறைகளின் உற்பத்தி செயலாக்கத்தை மேலும் இணைந்து முன்னெடுப்பது குறித்தும் அதற்கான வழிகள் குறித்தும், ரயில்வேயின் நிலக்கரி வணிகத்தை ஒருங்கிணைத்தலை உறுதி செய்வது குறித்தும் அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ரயில்வே சரக்குப் போக்குவரத்தில் சராசரியாக 50% நிலக்கரி சரக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மொத்த சரக்குப் போக்குவரத்து 1210 மெட்ரிக் டன்கள் ஆகும். இதில் கடந்த ஆண்டு மட்டும் 587 டன் நிலக்கரி ரயில்வே சரக்கு போக்குவரத்து மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த நிகழ்வின்போது பேசிய பியூஷ் கோயல், “சரக்குகளை எடுத்துச் செல்வதை ஊக்குவிக்க ரயில்வே துறை இடைவிடாத முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த முயற்சிகளில் எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் வழுக்குவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. நிலக்கரி, மின்சாரம் மற்றும் ரயில்வே ஆகிய மூன்று துறைகளும் பரஸ்பரம் அதிகபட்ச வளர்ச்சி அடைவதை உறுதி செய்ய ரயில்வே, நிலக்கரி மற்றும் மின்சார நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவை” என்றார்.

2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ரயில்வே சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.9896.86 கோடி ஈட்டி உள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டுடன் (ரூ.8716.29 கோடி) ஒப்பிடும்போது அதை விட அதிகமாக ரூ.1180.57 கோடியை இந்தியன் ரயில்வே ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT