மாநில அரசுகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பீட்டுத் தொகை உடனடியாக விடுவிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-வது கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மாநிலங் கள் கடன்கள் மூலம் திரட்டி சமாளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த யோசனைக்கு பாஜக ஆட்சியில் இல்லாத பிற மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித் தன. இதுகுறித்து ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை. எனி னும் அக்டோபர் 12-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவு செய்யலாம் என தெரிவி க்கப்பட்டது.
நேற்று இரவிலிருந்து விடுவிப்பு
இதற்கிடையில், இழப்பீட்டு வரியாக (செஸ்) இதுவரை சேர்ந் துள்ள ரூ.20 ஆயிரம் கோடி தொகை, மாநில அரசுகளுக்கு உடனடியாக அளிக்கப்படும் (திங்கள்கிழமை இரவில் இருந்தே) என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந் திப்பின்போது தெரிவித்தார். இத்துடன் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) தொகை ரூ.24 ஆயிரம் கோடி மாநில அரசுகளுக்கு இந்த வார இறுதியில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.1.1 லட்சம் கோடியாகும் என்று தெரிவித்த அவர், மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையில் எந்த ஒரு மாநிலமும் பாரபட்சமாக நடத்தப்படாது என்றும் இதுகுறித்து அக்டோபர் 12-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார். இழப் பீட்டு வரி வசூலானது 2022-க்குப் பிறகும் நீட்டிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரி வித்தார்.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு நிலுவை தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசுக்கும், மாநில அரசு களுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மத்திய அரசே கடன் பெற்று அதன் மூலம் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அளிக்க வேண்டும் என்று 10 மாநிலங்கள் வலியுறுத்தி உள்ளன. இதுகுறித்து மாநில அரசுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.