வணிகம்

இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 35 கோடி

செய்திப்பிரிவு

இந்தியாவில் இணையம் பயன்படுத் துவோர்களின் எண்ணிக்கை 35.2 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை இந்திய இண்டர்நெட் மற்றும் மொபைல் சங்கம் (ஐஏஎம்ஏஐ) தெரிவித்திருக்கிறது.

குறிப்பாக இணையம் பயன் படுத்துவோர்களில் 60 சதவீதம் நபர்கள் (21.3 கோடி) மொபைல் மூலம் பயன்படுத்துவதாக ஐஏஎம்ஏஐ தெரி வித்திருக்கிறது. ஜூன் 30 நிலவரப்படி உள்ள தகவல்கள் ஆகும்.

கடந்த வருடம் அக்டோபர் மாதத் துடன் ஒப்பிடும் போது இணை யதளத்தை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக உயர்ந் திருக்கிறது.

கடந்த அக்டோபரில் 27.8 கோடி இந்தியர்கள் இணையத்தை பயன்படுத்தினார்கள். அதுபோல 15.9 கோடி பேர்கள் மட்டுமே மொபைல் மூலம் இணையத்தை பயன்படுத்தினார்கள்.

SCROLL FOR NEXT