வணிகம்

சலுகைக் கட்டணத்தில் அமேசானின் கிண்டில்

பிடிஐ

சர்வதேச இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் புதிய சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. புத்தகம் படிப்பவர்களுக்கான சாதனமான கிண்டிலை அமேசான் ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருந்தது. இப்போது மாதத்துக்கு 199 ரூபாய் செலுத்தும் பட்சத்தில் 10 லட்சம் புத்தகங்களை படிக்கும் வசதியை அமேசான் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த சேவை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தாலும் இந்தியாவுக்கு இப்போதுதான் அறிமுகம் செய்யப்படுகிறது. சந்தா அடிப்படையிலான சேவையை 10-வது நாடாக இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது அமேசான்.

இந்தியா எங்களுக்கு முக்கியமான சந்தை, பலவகை யான புத்தகங்களையும் எங்களது சாதனத்தை பயன்படுத்தி இந்தியர் கள் படிக்கிறார்கள் என அமேசான் கிண்டில் இயக்குநர் சஞ்சீவ் ஜா தெரிவித்தார்.

இப்போது அளவற்ற சேவை கொடுக்கும் போது படிப்பதும் அதிகமாகும். 6 மாத சந்தா 999 ரூபாய்க்கும், வருட சந்தா 1,799 ரூபாய்க்கும் அளிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT