தற்போதைய பெருந்தொற்றின் போது முக்கிய பங்காற்றி வருவதற்காக மத்திய பொதுத்துறை நிறுவனங்களை மத்திய கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராட்டினார்.
‘‘பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் பெருமை ஆகும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய், செயல்திறன் மற்றும் லாபத்தின் மீது மோடி அரசு அதிக கவனம் செலுத்துகிறது," என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உடன் இணைந்து, 'தற்சார்பான, எழுச்சிமிக்க மற்றும் வலிமையான இந்தியாவை கட்டமைத்தல்' என்னும் கையேட்டை ஜவடேகர் வெளியிட்டார். பெருந்தொற்றின் போது பொதுத்துறை நிறுவனங்கள் ஆற்றிய பங்கைக் குறித்து இந்த புத்தகம் விளக்குகிறது.
பெருந்தொற்றின் போது 100 சதவீத உற்பத்தி மற்றும் சரக்குப் போக்குவரத்தை உறுதி செய்த மத்திய பொதுத்துறை நிறுவனங்களை பாராட்டிய ஜவடேகர், கட்டுப்பாடுகளை தளர்த்தி தற்சார்பு இந்தியாவை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு இன்னும் முக்கியமானது என்றார்.