பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

360 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ 31,464 கோடி நிதியுதவி

செய்திப்பிரிவு

360 உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ 31,464 கோடி நிதி உதவி இதுவரை அளிக்கப்பட்டுள்ளது.

திட்டங்களின் வளர்ச்சியை கண்காணிப்பதிலும், கடன்களை நிர்வகிப்பதிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்த டிஜிட்டல்/ கைபேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் திட்ட மேலாண்மை தகவல் அமைப்பு (பி-எம் ஐ எஸ்) ஒரு முக்கிய நடவடிக்கை என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா கூறினார்.

புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய தலைநகர் பகுதி திட்ட வாரியத்தின் திட்ட மேலாண்மை தகவல் அமைப்பின் தொடக்க விழாவில் பேசிய அவர், கோவிட்-19 சமயத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், இந்த தளம் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதாக தெரிவித்தார்.

2020 செப்டம்பர் 28 அன்று துர்கா சங்கர் மிஷ்ரா தலைமையில் நடைபெற்ற 59-வது பிஎஸ் எம்ஜி 1 கூட்டத்தில், ரூ 389 22 கோடி மதிப்பிலான 6 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

360 உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ 31,464 கோடி நிதி உதவி இதுவரை அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT