வணிகம்

ரூ.98,000 கோடி வருவாய் இலக்கு; மத்திய எரிசக்தி அமைச்சகத்துடன் என்டிபிசி ஒப்பந்தம் 

செய்திப்பிரிவு

2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகளை குறிப்பிட்டு என்டிபிசி மத்திய எரிசக்தி அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

மத்திய எரிசக்தி அமைச்சகத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் என்டிபிசி 2020 செப்டம்பர் 29 அன்று கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், 2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

340 பி யு மின்சார உற்பத்தி, 15 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி தயாரிப்பு, ரூ.21,000 கோடி முதலீட்டு செலவினங்கள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து ரூ.98,000 கோடி வருவாய் ஆகியவை சிறப்பு பிரிவின் கீழ் 2020-21ஆம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகள் ஆகும்.

இதர நிதி அளவுகோல்களும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT