இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான இரண்டு நாள் கருத்தரங்கை நிதி ஆயோக் நடத்தி வருகிறது.
விவசாயிகளின் நலன், நுகர்வோர் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கான உந்துதலை அளிப்பதற்காக, இயற்கை விவசாயத்தின் பல சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், நிதி ஆயோக், இரண்டு நாள் தேசிய அளவிலான ஆலோசனை கருந்தரங்கு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் உரையாற்றிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் இயற்கை வேளாண்மை நடைமுறையில் உள்ளது என்பதை வலியுறுத்தினார்,
மேலும், நாடு முழுவதும் இயற்கை வேளாண்மையை செயல்படுத்துவதற்கு நிதி ஆயோக் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். இயற்கை விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக மத்திய வேளாண் அமைச்சகம் ஒரு பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆந்திரா, கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவற்றின் இயற்கை வேளாண்மை தொடர்பான திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டு அவை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.