வணிகம்

இ-பேமெண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு என்பிசிஐ ஏற்பாடு

செய்திப்பிரிவு

உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கிராமப்புற பகுதிகளில் மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.

நபார்டு வங்கியுடன் இணைந்து இன்று முதல் இந்த விழிப்புணர்வு பயிற்சிகள் நாடு முழுவதும் நடைபெறுகிறது.

குறிப்பாக டெபிட் கார்டு பயன் படுத்துவது, பணப்பரிமாற்றம், வங்கிக் கணக்கை கையாளுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

இது தொடர்பான விளக்கக் கையேடை சென்னையில் நேற்று வெளியிட்டு பேசிய என்பிசிஐ தலைவர் எம்.பாலச்சந்திரன், மத்திய அரசின் நேரடி மானிய திட்டத்தை மக்கள் இ-பேங்கிங் முறையில் எளிதாக அணுக இந்த பயிற்சிகள் உதவும் என்றார். இந்தியா முழுவதும் 120 மையங்களிலும் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர் என 3 ஊர்களில் பயிற்சி இன்று தொடங்குவதாக கூறினார்.

SCROLL FOR NEXT