வணிகம்

ஹெச்- சிஎன்ஜி எரிவாயு பயன்படுத்த அனுமதி: அறிவிக்கை வெளியீடு

செய்திப்பிரிவு

ஹைட்ரஜன் கலந்த அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவை (ஹெச்- சிஎன்ஜி) பயன்படுத்துவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்காக தூய்மையான மாற்று எரிபொருளை பயன்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக, அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு இஞ்சின்களில் ஹைட்ரஜன் (18 சதவீதம்) கலந்த அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவை (ஹெச்- சிஎன்ஜி) பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. போக்குவரத்துக்காக தூய்மையான எரிபொருள்களின் கீழ் பல்வேறு மாற்று எரிபொருள்களை அமைச்சகம் அறிவித்து வருகிறது.

ஹைட்ரஜன் கலந்த அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவை வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்துவதற்கான தர நிர்ணயங்களை (IS 17314:2019) இந்திய தர நிர்ணய அலுவலகம் உருவாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT