வணிகம்

5 மாநிலங்கள் கூடுதலாக ரூ.9,913 கோடி கடன் பெற ஒப்புதல்

செய்திப்பிரிவு

ஆந்திரா, தெலங்கானா, கோவா, கர்நாடகா மற்றும் திரிபுரா ஆகிய 5 மாநிலங்கள் திறந்தவெளி சந்தை கடன் முறை((OMBs) மூலம் ரூ.9,913 கோடி கடன் பெற மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் செலவினத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை சீர்திருத்த நடவடிக்கைகளை இந்த மாநிலங்கள் நிறைவேற்றியதால், இந்த கூடுதல் கடனுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆந்திரா, 2,525 கோடியும், தெலங்கானா, ரூ.2,508 கோடியும், கர்நாடகா, ரூ.4,509 கோடியும், கோவா ரூ.223 கோடியும், திரிபுரா ரூ.148 கோடியும் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றை முன்னிட்டு, இந்த நிதியாண்டில் மாநிலங்கள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீத அளவுக்கு கூடுதல் கடன் பெற மத்திய அரசு அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT