கூட்டு முயற்சிக்கு இந்திய பாதுகாப்புத் துறையின் உலகளாவிய அணுகுமுறை: இஸ்ரேலுடன் 2020, செப்.24-ல் இணைய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
இந்தியா - இஸ்ரேல் இடையே 24/09/2020 அன்று இணைய கருத்தரங்கு நடந்தது. இதன் மையக் கரு, ‘‘கூட்டு முயற்சிக்கு இந்திய பாதுகாப்புத் துறையின் உலகளாவிய அணுகுமுறை: இணைய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி’’ . பாதுகாப்பு அமைச்சகத்தின், ராணுவ உற்பத்தி துறை மூலம் இந்த இணைய கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இணைய கருத்தரங்கு தொடரின் முதல் கருத்தரங்கு இது. நட்பு நாடுகளுடன் ராணுவ தளவாட ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், அடுத்த 5 ஆண்டுகளில் ராணுவ தளவாட ஏற்றுமதி இலக்கை 5 பில்லியன் டாலர் அடையவும், இந்த இணைய கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்படும்.
பாதுகாப்புத்துறை செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் இந்த இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டு இரு நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேசினர்.
பாதுகாப்பு தொழில் துறையில் இருநாடுகள் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த, துணை செயற் குழுக்களை உருவாக்குவது குறித்து இந்த இணையகருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், தொழில்நுட்ப பரிமாற்றம், கூட்டு தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு, புதுமை கண்டுபிடிப்பு, நட்பு நாடுகளுக்கு கூட்டு ஏற்றுமதி செய்வதாகும்.
இந்த கருத்தரங்கில், கல்யாணி குழுமம் மற்றும் ரபேல் அட்வான்ஸ்ட் டிபன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள் சங்கம் (SIDM) - கேபிஎம்ஜி நிறவனத்தின் ஆய்வுறிக்கை ஒன்றையும் இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர். அஜய் குமார் வெளியிட்டார்.
இந்த இணைய கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 90 மெய்நிகர் கண்காட்சி அரங்குகள் பங்கேற்றன.