வணிகம்

தெருவோர வியாபாரிகளுக்கு நிதியுதவி; 5.5 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்

செய்திப்பிரிவு

பிரதமரின் சுவநிதி திட்டத்தின் கீழ் 15 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 5.5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி (பி எம் சுவநிதி) திட்டத்தின் கீழ் 15 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 5.5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சுமார் இரண்டு லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுவிட்டன. 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் கோவிட்-19 பொது முடக்கத்துக்கு பிறகு தங்களது தொழில்களை மீண்டும் தொடங்குவதற்கு பிணையில்லா கடன்களை வழங்குவதற்காக வீட்டு வசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடன் வழங்கும் செயல்முறையை விரிவுபடுத்துவதற்கும், கடன் வழங்குபவர்களின் செயல்பாட்டை எளிமையாக்குவதற்கும் விண்ணப்பங்களை நேரடியாக வங்கிக் கிளைகளுக்கே அனுப்ப முடிவெடுக்கப் பட்டுள்ளது.

இந்த முறையின் மூலம் கடன்களுக்கு ஒப்புதலளிப்பதற்காக எடுத்து கொள்ளும் காலம் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், மேற்கண்ட செயல்முறையின் வசதிக்காக மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டு, 2020 செப்டம்பர் 11 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

SCROLL FOR NEXT