வணிகம்

ஏற்றுமதியை அதிகரிக்க கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

பிடிஐ

நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டெல்லியில் நேற்று இந்திய இன்ஜினீயரிங் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (இஇபிசி) வைர விழா கொண்டாட்ட நிகழ்ச் சியில் பேசிய அவர் மேலும் கூறியது: தேக்க நிலையிலிருந்து மீண்டு இப்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியப் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. உற்பத்தித் துறையில் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை அரசு நன்கு அறியும். ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டையாகத் திகழும் கட்டமைப்பு குறைகளை அரசு முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கும். மேக் இன் இந்தியா திட்டத்துக்காக 305 கோடி டாலர் வரையிலான முதலீட்டு ஆலோசனைகள் அரசுக்கு வந்துள் ளன. இதுவே பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டு முதலீடுகள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் முதலீடுகள் ஈர்க்கப்படுவதாக, இந்தியாவை சர்வதேச உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதே இத்திட் டத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் ஏற்றுமதியில் 22 சதவீத பங்களிப்பை செய்யும் இன்ஜினீயரிங் துறை சர்வதேச அளவில் பிரபலமாக இதற்கென தனி பிராண்டை உருவாக்கி பிரபலப்படுத்த வேண்டும் என்றார் நிர்மலா சீதாராமன்.

உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் தேக்க நிலை நிலவினாலும் இன்ஜினீயரிங் துறையானது ஏற்றுமதியில் மிகச் சிறந்த சவாலாகத் திகழ்கிறது என்று வர்த்தகத்துறைச் செயலர் ரீடா டியோடியா கூறினார்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் பொருளாதார சூழல் சரியாக இல்லை. பணவீக்கம் மற்றும் கரன்சி மாற்று மதிப்பில் ஸ்திரமற்ற நிலை நிலவுவதால் டாலரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என்று ரீட்டா குறிப்பிட்டார். இன்ஜினீயரிங் பணி களுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு மற்றும் சேவைக்கான வாய்ப்புகள் இப்போது வெளிநாடுகளில் அதிகரித்து வருகின்றன. இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றார்.

உயர் மதிப்பிலான பொருள்கள் சந்தையில் இந்திய தயாரிப்புகளின் பங்களிப்பு வெறும் 1.2 சதவீதமாக உள்ளது என்று அவர் கூறினார்.இந்தியாவின் இன்ஜினீயரிங் துறை ஏற்றுமதி 2010-ம் ஆண்டு 5,000 கோடி டாலராக இருந்தது. 2014-15-ல் இது 7,000 கோடி டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT