வணிகம்

ஆன்லைன் வணிகம்; இந்தியாவில் வசிக்கும்  ஒருவரை நிறுவனங்கள் தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு 

செய்திப்பிரிவு

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்தியாவில் வசிக்கும் மூத்த அதிகாரி ஒருவரை தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர், தான்வே ராவ் சாகேப் தாதா ராவ் தெரிவித்த விவரம் வருமாறு:

2019-இல் ஜனவரியில் 1.97 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலைக் குறியீடு (பணவீக்கம்), பிப்ரவரியில் 2.57 சதவீதமாகவும், மார்ச்சில் 2.86 சதவீதமாகவும், ஏப்ரலில் 2.99 சதவீதமாகவும், மே மாதத்தில் 3.05 சதவீதமாகவும், ஜூனில் 3.18 சதவீதமாகவும், ஜூலையில் 3.15 சதவீதமாகவும், ஆகஸ்டில் 3.28 சதவீதமாகவும் இருந்தது.

2020-இல் ஜனவரியில் 7.59 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலைக் குறியீடு (பணவீக்கம்), பிப்ரவரியில் 6.58 சதவீதமாகவும், மார்ச்சில் 5.84 சதவீதமாகவும், ஜூனில் 6.123 சதவீதமாகவும், ஜூலையில் 6.73 சதவீதமாகவும், ஆகஸ்டில் 6.69 சதவீதமாகவும் (உத்தேசமாக) இருந்தது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள தொடர்ந்து எடுத்து வருகிறது.
நுகர்வோர் விவகாரங்கள் துறையின் விலை கண்காணிப்புப் பிரிவு அளித்த தகவல்களின் படி, மார்ச் 2020-இல் ரூ 33.34 ஆக இருந்த ஒரு கிலோ அரிசியின் விலை, ஏப்ரலில் 34.07 ஆகவும், மே மாதம் 34.09 ஆகவும், ஜூன் மாதம் 34.35 ஆகவும், ஜூலையில் 34.21 ஆகவும், ஆகஸ்டில் 34.54 ஆகவும் இருந்தது.

மார்ச் 2020-இல் ரூ 28.81 ஆக இருந்த ஒரு கிலோ கோதுமையின் விலை, ஏப்ரலில் 29.10 ஆகவும், மே மாதம் 28.94 ஆகவும், ஜூன் மாதம் 28.49 ஆகவும், ஜூலையில் 28.12 ஆகவும், ஆகஸ்டில் 28.23 ஆகவும் இருந்தது.

நுகர்வோர் பாதுகாப்பு (மின்-வணிகம்), விதிகள், 2020-இன் படியும், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் படியும், மின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்தியாவில் வசிக்கும் மூத்த அதிகாரி ஒருவரை தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT