வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 585 விமானங்கள் இயக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் சிவில் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கரோனா தடை காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடு விமான நிறுவனங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை வெளியுறவுத்துறை துறை அமைச்சகம் அளித்த தகவல் படி, இந்தியர்களை தாய்நாடு அழைத்து வர 5,817 விமானங்கள் இயக்கப்பட்டன.
தமிழக அரசு தெரிவித்த தகவல் படி, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 585 விமானங்கள் தமிழகத்துக்கு 5 கட்டங்களாக இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.