பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

தேசிய தலைநகர் பகுதியில் சுற்றுப்பாதை ரயில் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செய்திப்பிரிவு

தேசிய தலைநகர் பகுதியில் 121.7 கிமீ நீளமுள்ள சுற்றுப்பாதை ரயில் தட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஹரியானா சுற்றுப்பாதை ரயில் தட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

121.7 கிமீ நீளமுள்ள இந்த தடம், சோனா, மானேசர் மற்றும் கர்கவுடா வழியாக பல்வாலில் இருந்து சோனிபட் வரை செல்லும். ரயில்வே அமைச்சகம் மற்றும் ஹரியாணா அரசின் கூட்டு நிறுவனமான ஹரியாணா ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.

டெல்லிக்கு செல்லாத போக்குவரத்து மாற்று வழியில் செல்லவும், தேசிய தலைநகர் பகுதியின் துணை பிராந்தியமான ஹரியாணாவில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையங்கள் அமையவும் இந்த திட்டம் வழிவகுக்கும்.

ரூபாய் 5,617 கோடி மதிப்பிலான இந்த திட்டம், ஐந்து வருடங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT