வணிகம்

ஏர் இந்தியா நிறுவனத்தை லாப பாதைக்கு மீட்டு செல்ல பணியாளர்கள் ஈடுபாடு தேவை

பிடிஐ

ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டு லாப பாதைக்கு திருப்ப அனைத்து பணியாளர்களும் உறுதியுடனுடம் ஈடுபாட்டுடனும் பணியாற்ற வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஷ்வணி லொஹாணி கூறியுள்ளார்.

“ஒவ்வொரு பணியாளர்களும் மனப்பூர்வமாக பணியாற்ற வேண்டும் அப்போதுதான் எண்ணம் நிறைவேறும். விமானத்தை தூய்மையாகப் பேணுதல், சரியான நேரத்தில் விமானத்தை செலுத்துதல் என அனைத்து விஷயங்களிலும் பணியாளர்கள் சிறப்புடன் செயலாற்ற வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை சென்னை வந்த அஷ்வணி, ஏர் இந்தியா நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநர் ஆர்.ஹரிஹர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக அஷ்வனி லொஹாணி பொறுப்பேற்றார்.

முன்னதாக டெல்லி விமான நிலையம், ஹைதராபாத், மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத் தாவில் உள்ள ஏர் இந்தியா அலுவலங்களிலும் நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டுவருவது தொடர்பான ஆலோசனை நடத்தி னார். அங்குள்ள பணியாளர் களை சந்தித்து உற்சாகப்படுத் தினார்.

SCROLL FOR NEXT