நாட்டின் தொழில்துறை உற்பத்தி 4.2 சதவீதமாக கடந்த ஜூலை மாதத் தில் உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்தில் (ஜூன்) இது 3.8 சதவீதமாக இருந்தது. நேற்று அரசு வெளியிட்ட அட்டவணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
தொழில் துறையில் அதிகரித்து வரும் முதலீடுகள் காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததைக் காட்டிலும் 0.9 சதவீதம் இது அதிகரித்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) மத்திய தொழில்துறை உற்பத்தி பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இது பெருமளவு அதி கரித்ததாக அதில் குறிப்பிடப்பட் டுள்ளது.
உற்பத்தித் துறையில் ஜூலை மாதத்தில் தொழில்துறையின் பங்களிப்பு 4.7 சதவீதமாகும். இது கடந்த ஜூன் மாதம் 4.6 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததைக் காட்டிலும் 0.3 சதவீதம் குறைவாகும்.
சுரங்கத்துறை உற்பத்தி 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இருந்த நிலையை விட 0.1 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூன் மாதம் சுரங்கத்துறை உற்பத்தி 0.3 சதவீதம் சரிந்திருந் தது.
மின்னுற்பத்தி 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதம் 1.3 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் மின்னுற் பத்தி 11.7 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது.
ஒட்டுமொத்தமாக தொழில் துறை உற்பத்தி கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலத் தில் 3.5 சதவீதமாக இருந்தது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் 3.6 சதவீதமாக இருந் ததைக் காட்டிலும் சற்றுக் குறை வாகும்.