மருத்து துறையை சேர்ந்த நிறுவனமான சிப்லா அமெரிக் காவை சேர்ந்த இன்வாஜென் பார்மா மற்றும் எக்லேன் நிறுவனங்களை வாங்க இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் ஹெட்டரோ குழுமத்தைச் சார்ந்தவை. இந்த இரு நிறுவனங்களை 3,652 கோடி ரூபாய் (55 கோடி டாலர்) கொடுத்த சிப்லா வாங்குகிறது.
இந்த நிறுவனங்களின் வருமானம் 20 கோடி டாலர் (டிசம்பர் 2014) ஆகும். அமெரிக்கா மருந்து துறையில் காலதாமதமாக களம் இறங்கும் நிறுவனம் சிப்லா ஆகும். இந்த நிறுவனங்களை வாங்குவதன் மூலம் அமெரிக்க மருத்து துறையில் தனது சந்தையை விரிவுபடுத்த முடியும் என சிப்லா நிறுவனத்தின் சுபானு சக்சேனா தெரிவித்தார்.
இன்வாஜென் நிறுவனங்கள் 40 புதிய மருந்துகளுக்கு முன் அனுமதி வாங்கியுள்ளது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் 0.93% அளவுக்கு சிப்லா பங்குகள் சரிந்து 649 ரூபாயில் முடிவடைந்தன.