பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

பிஹார் மாநிலம் தர்பங்கா விமான நிலையம் தயார்: நவம்பரில் போக்குவரத்து தொடக்கம்

செய்திப்பிரிவு

பிஹார் தர்பங்கா விமான நிலையத்தின் பணிகளை ஆய்வு செய்த மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தர்பங்காவில் இருந்து கிளம்பும் விமானங்களுக்கு முன்பதிவு இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று கூறினார்.

சத் பூஜா புனித பண்டிகைக்கு முன் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து விமானப் போக்குவரத்து இங்கு தொடங்கும் என்று மேலும் அவர் கூறினார்.

வடக்கு பிஹாரின் 22 மாவட்டங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தர்பங்கா விமான நிலையப் பணிகள் குறித்து திருப்தி தெரிவித்த அவர், கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன

என்றார். உடான் திட்டத்தின் கீழ் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு இந்த வழித்தடம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் உள்ள தியோகர் விமான நிலையப் பணிகளை ஆய்வு செய்த ஹர்தீப் சிங் புரி, பணிகள் முடிவடையும்

நிலையில் உள்ளதாகவும் குறித்த காலத்துக்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT