ஏப்ரல்-ஆகஸ்டு 2020-21-இல் 16.11 லட்சம் டன் உரத்தை உற்பத்தி செய்த என்எப்எல், 13% வளர்ச்சியை கண்டது
தேசிய உர நிறுவனம் (National Fertilizers Limited -NFL), 2020-21-இன் முதல் ஐந்து மாதங்களில் 16.11 லட்சம் டன் உரத்தை உற்பத்தி செய்து உற்பத்தி இலக்குகளை தாண்டியது.
2019-20-இன் இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 14.26 டன்னுடன் ஒப்பிடும் போது, இது 13 சதவீதம் அதிகமாகும்.
மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் உரங்கள் துறையின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான என் எப் எல், ஏப்ரல்-ஆகஸ்ட் 2020-இல் 23.81 லட்சம் மெட்ரிக் டன் உரங்களை விற்பனை செய்தது. கடந்த வருடத்தின் 20.57 லட்சம் மெட்ரிக் டன்னோடு ஒப்பிடும் போது இது 16 சதவீதம் வளர்ச்சி ஆகும்.
ஒரு பொருளை மட்டுமே தயாரித்து வந்த இந்த நிறுவனம், கடந்த சில வருடங்களில் பல பொருள் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தற்போது அனைத்து வேளான் உள்ளீடுகளையும் என் எப் எல் ஒரே குடையின் கீழ் வழங்குகிறது.
பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நிறுவனத்துக்கு உர தயாரிப்பு நிலையங்கள் உள்ளன.