பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

‘‘5 நட்சத்திர கிராமங்கள்’’- தபால் திட்டங்கள் ஊரகப் பகுதிகளை முழுமையாக சென்றடைய புதிய திட்டம்

செய்திப்பிரிவு

தபால் திட்டங்கள் ஊரகப் பகுதிகளை 100% சென்றடைய ஐந்து நட்சத்திர கிராமங்கள் திட்டத்தை இந்திய தபால் துறை தொடங்கியது.

நாட்டின் ஊரகப் பகுதிகளை தபால் துறையின் முக்கிய திட்டங்கள் முழுவதும் சென்றடைய, ஐந்து நட்சத்திர கிராமங்கள் என்னும் திட்டத்தை இந்திய தபால் துறை தொடங்கியுள்ளது.

தொலைதூர கிராமங்களை தபால் திட்டங்கள் சென்றடையவும், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு கிடைக்கவும் இத்திட்டம் உதவும். ஐந்து நட்சத்திர கிராமங்கள் திட்டத்தின் கீழ், அனைத்து தபால் பொருட்கள் மற்றும் சேவைகள் சந்தைப்படுத்தப்பட்டு, விளம்பரப்படுத்தப்படும்.

அனைத்து சேவைகளும் கிளை அலுவலகங்களில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளில் சில வருமாறு: சேமிப்பு வங்கி கணக்குகள், தங்க மகள் திட்டம், இந்திய தபால் கட்டண வங்கி கணக்குகள், தபால் ஆயுள் காப்பீடு, பிரதமரின் காப்பீட்டு திட்டம்.

இத்திட்டங்களைப் பற்றி கிராமிய தபால் சேவகர்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று பிராச்சாரம் செய்வார்கள். பொது இடங்களில் கோவிட்-19 பெருந்தொற்று பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்படும்.

SCROLL FOR NEXT