அரசு விளம்பரங்களுக்கான உள்ளடக்க ஒழுங்குமுறைக்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் 19-வது கூட்டம் நடைபெற்றது.
அரசு விளம்பரங்களுக்கான உள்ளடக்க ஒழுங்குமுறைக்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் 19-வது (மெய்நிகர்) கூட்டம் 2020 செப்டம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்றது.
இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தலைமையிலான இந்தக் கூட்டத்தில், குழுவின் இரு உறுப்பினர்களான ஆசிய விளம்பர சங்கங்களின் கூட்டமைப்பின் ரமேஷ் நாராயண் மற்றும் பிரசார் பாரதி வாரியத்தின் பகுதி நேர உறுப்பினரான அசோக் குமார் டாண்டன் கலந்து கொண்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, அரசு விளம்பரங்களுக்கான உள்ளடக்க ஒழுங்குமுறைக்காக மூன்று நபர்கள் கொண்ட குழுவை மாநில அரசுகள் அமைக்க வேண்டும். கர்நாடகா, கோவா, மிசோராம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் இக்குழுக்களை அமைத்துள்ள நிலையில், மத்தியக் குழு தனது விளம்பர உள்ளடக்கத்தைக் கண்காணிக்க சத்தீஸ்கர் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மற்ற மாநிலங்கள் இத்தகைய குழுக்களை அமைப்பதற்கு கால தாமதம் செய்வதைப் பற்றி அதிருப்தி தெரிவித்த, அரசு விளம்பரங்களுக்கான உள்ளடக்க ஒழுங்குமுறைக்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு, இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதைப் போன்றதாகும் என தெரிவித்தது.